Thursday, March 31, 2011

'தாழ்ப்பாளை *சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது. அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'

மேலோட்டமான பொருள்:


தாழ்ப்பாளை லொட்டு லொட்டுனு ஆட்டினால் ஆட்டும் சத்தம் பெரியவர்களை கோபப்படுத்தும் அவர்கள் தேவையில்லாமல் சபிப்பார்கள், திட்டி தீர்ப்பார்கள், அதனால் கதவின் தாழ்ப்பாளை ஆட்டும் குந்தையால் பெரியவர்களுக்குள் சண்டை வரும்.


உட்பொருள்:

அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும்

தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.


நுட்பமான பொருள்:

குழந்தைகளோடு விளையாட நேரம் செலவிட வேண்டும். குழந்தைகள் தொங்கி விளையாட ஆசைப்படுகிறது. பக்கத்தில் உள்ள பூங்காவிற்கு அழைத்து செல்லவும். சண்டை வராது மகிழ்ச்சி வரும்.


கவிப் பொருள்:

தாழ்ப்பாள் இல்லா கதவு

நினைவுகளின் இல்லத்தில்

தாழ்ப்பாள் ஏதும் இல்லை...

கதவு திறந்து தானிருக்கிறது

யாரும் ஆட்ட முடியாது!

Wednesday, March 2, 2011

ஆறு கெட நாணல் விடு. ஊரு கெட நூல விடு .

அறிந்த விளக்கம்

நேரடியாய் பழமொழியைப் பொருள் கொள்ளப் பார்த்தோமானால் ஆற்றை பாழாக்குவதற்கு நாணல் விட்டும் ஊரைக் கெட்டுப் போக செய்ய நூலை விடு என்பதாகவும் வரும். சில பழமொழிகள் இடம் மாற்றிப் பொருள் கொண்டோமானால்தான் அர்த்தம் விளங்கும். இது பற்றி இலக்கணப் பாடத்தில் இடம்மாற்றிப் பொருள்கோள் என்ற தலைப்பில் ஒரு பகுதியே தனியாக இருக்கிறது.

அறியாத விளக்கம் :

நூல் விட்ட ஊரும் நாணலற்ற ஆற்றுக்கரையும் பழுதாய் போகும் என்பதாய் அர்த்தம் கொள்ள வேண்டும். அதாவது

படிப்பறிவில்லாத அதில் ஆர்வம் காட்டாத ஊர் எந்த வித முன்னேற்றமும் அடையாது. நாணல் போன்ற தாவர வகைகள் அதிகம்

அடர்ந்திருக்கும் கரைப்பகுதி பலமுள்ளதாக இருக்கும்.சீக்கிரம் ஆற்றினால் அரிக்கப்பட்டு கரைகள் பாதிக்கப்படாது என்பதாய்

சொல்லப்பட்ட பழமொழி முன்னுக்கு பின் மாறி மருகி இவ்விதம் வந்து விட்டது.

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி

அறிந்த விளக்கம்

வாய்ச் சொல்லில் வீரனடி, அறுக்கத் தெரியாதவன் கக்கத்தில் ஏழெட்டுக் கருக்கருவாள் போன்ற பதங்களுக்கு என்ன பொருளோ

அதே பொருள் தருவதுபோல் தான் இந்தப் பழமொழியும் தோற்றமளிக்கிறது . அதாவது பேச்சு பெருசா இருக்கும்,செயல்ல ஒண்ணும் இருக்காது என்று இடித்துரைப்பார்களே அதுபோலதான் இந்த பழமொழியும் உலக வழக்கில் பொருள் கொள்ளப் பட்டு வருகிறது . ஆனால் இதன் பொருளை ஆராய்ந்தால் ஒரு அற்புதமான விளக்கம் கிடைக்கிறது.

அறியாத விளக்கம்

ஓட்டைக் கப்பலும் ஒன்பது மாலுமிகளும் யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டு போவீர்கள்.. அது நாம்தான்.. என்ன குழப்பமாக

இருக்கிறதா..? ஒட்டைக் கப்பல் என்பது மனித உடலையும் ஒன்பது மாலுமிகள் என்பது நம் உடலில் உள்ள பல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது .. கவிஞர் கண்ணதாசன் இறைவனைப் பற்றி எழுதிய அவன் தான் இறைவன் கவிதையில் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடுவார். ஒன்பது ஓட்டைக்குள் ஒரு துளி காற்றை வைத்து சந்தையில் விற்று விட்டான் ஒருவன் அவன் தடம் தெரிந்தால் அவன் தான் இறைவன் விளக்கம் புரிகிறது தானே நண்பர்களே..?

எனவேதான் இந்த மனித வாழ்க்கையில் ஒருவனுக்கு மரணம் நேரும்போது அவனுடைய உயிர் மூச்சு அந்த உடலின் எந்த

ஓட்டைவழியேனும் வெளியேறலாம் என்பதற்காய் பெரியோர்கள் நிலையற்ற இந்த மனித வாழ்வை குறிக்கும் போது ஓட்டைக்

கப்பலுக்கு ஒன்பது மாலுமி போய் ஆக வேண்டியதைப் பாரப்பா என்று சொல்லி வைத்தார்கள்