Friday, April 15, 2011

'நகத்தைக் கடித்தால் தரித்திரம்.'

மேலோட்டமான பொருள்:

நகங்களை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள், பயம், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக அவர்கள் இருந்திருக்கின்றார்கள். தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத ஒரு இயலாமை நிலையிலே தங்கள் நகங்கள் மீது கோபங்களைக்காட்டி

உட்பொருள்:

நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும். நகங்களைக் கடிப்பதால் நகங்களைச்சுற்றி விரல்களில் கண்களுக்குப் புலப்படாத புண்கள் ஏற்படுகின்றன.

நுட்பமான பொருள்:

சமீபத்தில் கிடைக்கப்பெற்ற ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளின்படி, குழந்தைகள், சிறுவர்கள் மட்டுமன்றி, வயது வந்தவர்களும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள்.

இதில் கொஞ்சமாவது நாம் ஆறுதலடையவேண்டிய விடயம் என்னவெனில், தங்களது செயல்களில் வெற்றியடையும் மனிதர்களே அதிகமாக நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது.

நகம் கடிக்கும் பெண்கள் மென்மையாக இருக்கிறார்கள். அதே வேளையில் நகம் கடிக்கும் ஆண்களோ முரட்டுத்தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

நகம் வெட்ட கத்தரிக்கோல், பிளேடு, நகம் வெட்டி, கத்தி போன்றவற்றை அறவே பயன்படுத்தக் கூடாது. அவசரத்தில் விரல் வெட்டு பட்டு மருத்துவமனை செல்ல நேர்ந்தது.

நகங்களுக்கு முதல் எதிரியே தண்ணீர்தான். 'நகத்தைக் *கடிக்கும் Potho அதிக நேரம் நகங்கள் தண்ணீரில் நனையும் போ tho , நகத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்ப் பசை தீர்ந்து விடுகிறது. இதனால் நகங்கள் வறண்டு உலர்ந்து போய்விடும். இந்த "டீஹைட்ரேடிஸ்" தாக்குதலைத் தவிர்க்க நகங்களில் பூசப்படும்கோல்ட் க்ரீமையோ அல்லது சரும எண்ணையையோ தடவலாம். இதன் மூலம் நகத்தின் எண்ணெய்ப் பசை பாதுகாக்கப்படும்.

கவிப் பொருள்:

நகத்தைக் கடி

உன்னில் நாணம்

வரும்போதெல்லாம்

நீ நகம் கடித்துக் கொண்டு

எமை நோக்குவாயே..

அந்த நாணம் கொண்ட

பார்வைக்காகவே

பிரார்த்திக்கிறேன்

அடிக்கடி

உனக்கு நகம்

வளர்ந்திட வேண்டுமென்று!

Wednesday, April 6, 2011

வீட்டுக்குள்ள நகம் வெட்டினா, வீடு விளங்காது.' 

மேலோட்டமான பொருள்:

வீட்டுக்குள்ள நகம் வெட்டுறவங்க வேலை வெட்டி இல்லாதவங்க செய்யிற வேலை, அதனால தரீத்தீரம் வரும். வீடு விளங்காது.

உட்பொருள்:

வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப்

பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு

வழிவகுத்துவிடும்.

நுட்பமான பொருள்:

நகங்களை வெட்டும் போது தினசரி நாளிதழ் தரையிலே விரித்து வைத்து நகம் வெட்டினால் மிகவும் பாதுகாப்பானது. நகம் வெட்டிய இடத்தை சுத்தமாக பெருக்கவும்.

கவிப் பொருள்:

நகம் வளர

நெகத்தை வெட்டி

வீட்டுல போடாதடா மொளச்சிடும் !

நகத்தை வெட்டும் போதெல்லாம்

அம்மா சொல்லுவாள்.

நீ

வெட்டிப்போட்ட நகங்களை

என் வீட்டுக்குள் நட்டு வைத்தேன்

ஆனால்....

நகங்கள் வளரவில்லை.

உன் ஞாபகங்கள் வளர்ந்தன.

Tuesday, April 5, 2011

அ, கர வரிசைல் ‘அ' பழமொழிகள்

· அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

· அகல உழுகிறதை விட ஆழ உழு.

· அகல் வட்டம் பகல் மழை.

· அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

· அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

· அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

· அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

· அடக்கமே பெண்ணுக்கு அழகு.

· அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

· அடாது செய்தவன் படாது படுவான்.

· அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

· அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.

· அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

· அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

· அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

· அந்தி மழை அழுதாலும் விடாது.

· அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

· அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.

· அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.

· அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

· அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

· அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

· அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

· அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

· அழுத பிள்ளை பால் குடிக்கும்.

· அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

· அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

· அறச் செட்டு முழு நட்டம் .

· அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

· அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

· அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

· அறமுறுக்கினால் அற்றும் போகும்.

· அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.

· அறிய அறியக் கெடுவார் உண்டா?

· அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

· அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

· அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

· அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

· அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

· அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.

· அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

· அற்ப அறிவு அல்லற் கிடம்.

· அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

· அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?

· அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.

· அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

· அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?