Friday, April 1, 2011

பசி வந்தால் பத்தும் பறக்கும்

அறிந்த விளக்கம்:

பசி வந்தால் பற்றும்(பத்து அல்ல) பறந்து போம்.
பசி ருசி அறியாது என்பர். ஒருவருக்கு கடுமையான பசி ஏற்படும் போது
அது என்ன சாப்பாடு உப்பு உறைப்பு இருக்கிறதா என எதுவும் பார்க்க மாட்டார்கள்.
இந்த உணவு தான் வேண்டும் என்ற ஆவல் அற்றுப் போய் விடும்.
பசி வந்தால் (உணவின் மீதான)பற்றும் பறந்து போம். எனவே குழந்தைகளே உணவின் மீதான பற்றை விட்டொழியுங்கள்.

அறியாத விளக்கம் 1:

இதில அந்த 10 என்றால் என்ன?

'நல்வழி' : ஔவையார் பாடல்

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.

1. மானம்: honour and respect

2. குலம்: birth

3. கல்வி: education

4. வன்மை: caring

5. அறிவுடைமை: wisdom

6. தானம்: giving

7. தவம்: penance

8. உயர்ச்சி: high status

9. தாளாண்மை: effort

10. காமம்: sexuality

அறியாத விளக்கம் 2:

பத்து என்பது எந்தக் குணங்களையும் குறிப்பிடவில்லை அது பானையில் அடிப்பிடிடத்துள்ளது எனக்குறுவோமே அது தான் அதாவது அடியில் கருகிப்போயுள்ள சோறு என கொள்ளலாம் அதாவது பசி வந்தால் அந்தப் பத்தும் (அடிப்பிடித்த சோறும்) பானையில் இருந்து பறந்து விடும் சிலர் கூறுவர் நான் வீடுகளில் பத்துப்பாத்திரம் கழுவி (தேய்த்து) சம்பாதிக்கிறேன் என்று அதுவும் அதே அர்த்தம்.

No comments:

Post a Comment