மேலோட்டமான பொருள்:
வீட்டுக்குள்ள நகம் வெட்டுறவங்க வேலை வெட்டி இல்லாதவங்க செய்யிற வேலை, அதனால தரீத்தீரம் வரும். வீடு விளங்காது.
உட்பொருள்:
வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப்
பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு
வழிவகுத்துவிடும்.
நுட்பமான பொருள்:
நகங்களை வெட்டும் போது தினசரி நாளிதழ் தரையிலே விரித்து வைத்து நகம் வெட்டினால் மிகவும் பாதுகாப்பானது. நகம் வெட்டிய இடத்தை சுத்தமாக பெருக்கவும்.
கவிப் பொருள்:
நகம் வளர
நெகத்தை வெட்டி
வீட்டுல போடாதடா மொளச்சிடும் !
நகத்தை வெட்டும் போதெல்லாம்
அம்மா சொல்லுவாள்.
நீ
வெட்டிப்போட்ட நகங்களை
என் வீட்டுக்குள் நட்டு வைத்தேன்
ஆனால்....
நகங்கள் வளரவில்லை.
உன் ஞாபகங்கள் வளர்ந்தன.

No comments:
Post a Comment