பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று வாழ்த்துவதுண்டு.
அறிந்த விளக்கம்:
பொதுவா இப்படி யாரும் வாழ்த்தும் போது ஒடனே ரொம்ப புத்திசாலித்தனமா கவர்ன்மென்ட் ரெண்டுக்கு மேல கூடாதுன்னு சொல்லிர்க்கே அப்புறம் பதினாறு எதுக்கு அப்டீன்னு என்னவோ கவர்ன்மென்ட் சொல்லறதை அட்சரம் பிசகாம செய்யற மாதிரி பீலா விடற நெறைய பேரை நாம பாத்திருக்கோம்.... இன்னும் சிலர் அதோட அர்த்தமே தெரியாம "நன்றி" அப்டீன்னு சொல்றதை பார்த்திருக்கோம். நான் இப்படித்தான் இருந்தேன் ரொம்ப நாளா....
அறியாத விளக்கம் :
அந்த பதினாறு என்ன?
- கல்வி
- அறிவு
- ஆயுள்
- ஆற்றல்
- இளமை
- துணிவு
- பெருமை
- பொன்
- பொருள்
- புகழ்
- நிலம்
- நன்மக்கள்
- நல்லுலகம்
- நோயின்மை
- முயற்சி
- வெற்றி
அது ஒரு புராண செய்யுள்.
கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வராத நட்பும்,
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்,
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வராத கொடையும்,
தொலையாத நிதியமும் கோணாத கோலும்
ஒரு துன்பமில்லாத வாழ்வும்,
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரோடு கூட்டுக் கண்டாய்
அலையழி அறிதுயிலும் மாயனது தங்கையே
அதிக்கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாய் நீ அபிராமி...
ரொம்ப அழகா பாடிட்டு அவரே அதுக்கு பொருளும் சொன்னாரு. கேட்டு தெரிஞ்சதுக்கு அப்புறம் மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்தது...
செய்யுளின் பொருள்:
1. கலையாத கல்வி
2. குறையாத வயது
3. கபடில்லா நட்பு
4. கன்றாத வளமை
5. குன்றாத இளமை
6. பிணியில்லா உடல்
7. சலிப்பில்லா மனம்
8. அன்பான வாழ்க்கை துணை
9. தவறாத மக்கட்பேறு
10. குறையாத புகழ்
11. வார்த்தை தவறாத நேர்மை
12. தடையில்லாது தொடரும் கொடை
13. தொலையாத செல்வம்
14. பராபட்சம் இல்லாத அரசு
15. துன்பம் இல்லாத வாழ்க்கை
16. இறைவனின் அருள்

i love it!!! naan ithai en pakkatthil podalaamaa???
ReplyDelete