அறிந்த விளக்கம் :
சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெண்களை பிடிக்காத ஒருவர் ஒரு கால கட்டத்தில் கோபமாய் சொல்லிவிட்டு போனதாக கூட எடுத்துக் கொள்ளலாம் என்கின்றனர் சிலர். நிச்சயம் நாகரீக காலகட்டட்துக்கு பின்னால்தான் என எடுத்துக் கொள்ள வேண்டும். ( சேலை கட்டுற பொண்ணை, ஜீன்ஸ் போடற பொண்ணை , சுடி போடற பொண்ணை நம்பலைன்னா வேற யாரை தாங்க நம்பறது என்கிறார் உடையார்கோவிலிருந்து உலக நாதன் ). ஆனால் உண்மையான பழமொழி அதுவல்ல..
அறியாத விளக்கம் :
சேல் + ஐ அகட்டும் பெண்ணை நம்பாதே என்பது இந்த பழமொழியின் உண்மையான வடிவம். சேல் என்பது கண் விழியை
குறிக்கிறது. எப்போதும் விழிகளை பரபரப்பாய் அலைபாய விடும் குணாதிசயம் உள்ள பெண்கள் தப்பான நடத்தையை,
குணத்தை கொண்டிருப்பார்கள் ( உள்ளத்தின் கதவுகள் கண்களடா.. ) . எனவே அந்த குணமுடைய பெண்களின்
குணாதிசயங்களை அவர்கள் கண்ணிலிருந்தே கண்டுபிடித்து விடலாம். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி நாளடைவில் திரிந்து இப்படியாகி விட்டது. ( இந்த காலத்தில் சேல் அகற்றா
விட்டாலும் கூட ஆண்களை நம்ப முடியாது என்கிறார் நண்பர் )

No comments:
Post a Comment