அறிந்த விளக்கம் :
மண் குதிரை மீதேறி ஆற்றில் இறங்கினால் என்ன ஆகும். குதிரை கரைந்து போய் ஆற்றோடு போக வேண்டியதுதான். அதாவது
தகுதியற்ற நபர்க்கு தரப்படும் பெறும் பொறுப்பு சீரழிவில் கொண்டு விடும் என்பதற்காக சொல்லப்பட்ட உவமையாக மேற்கண்ட
பழமொழி உலக வழக்கில் இருந்து வருகிறது. சொல்ல வந்த கருத்து என்னவோ சரிதான்..ஆனால் அந்த பழமொழி
படிக்கத் தரும் அர்த்தம் அதுவல்ல.
அறியாத விளக்கம்:
மண் குதிரை என்பது மண்ணால் ஆன விலங்கை குறிக்க வில்லை. ஆற்றில் நீரில்லாது வறண்டு போன சமயங்களில் ஆங்காங்கே மணல் மேடுகளை காணலாம். நீர் இழுவையிலோ அல்லது ஓரிடத்தில் மண் அரித்தோ மற்றொரு இடம் மேடாகவே அந்த ஆற்றுப் பரப்பு ஒரு ஒழுங்கின்மை வடிவமாக இருக்கும். அந்த மேடான மணற்பரப்பை குதிர் என்பார்கள் ( குதிர் = குன்று ). நீரில்லாதபோது அந்த மேடான மண் குதிர்களை பார்த்து விட்டு பின் ஆறு நிறைய நீர் போகும்போது இந்த இந்த இடத்தில் ஏற்கனவே மேடு இருக்கிறது எனவே ஆழம் குறைவாக இருக்கும் என்று இறங்கினால் ஆபத்தை சந்திக்க நேரிடும்.ஏனெனில் நீர் போக்கின் போது மேடான பரப்புகள் கரைக்கப்பட்டு அடித்து செல்லப்பட்டிருக்கலாம். எனவே முன் பார்த்ததை நினைத்துக் கொண்டு இறங்கினால் ஆபத்தில் கொண்டு விடும் என்பதற்காக சொல்லப்பட்டது குதிர் குதிரையாகி பழமொழியின் தோற்றமே மாறி போய்விட்டது.

No comments:
Post a Comment