Tuesday, February 8, 2011

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்

அறிந்த விளக்கம்:

அமெரிக்காவுக்கு ஒரு வாழ்வு வந்தால் அதனால் மோசமாக பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கும் ஒரு வாழ்வு வரும் . இப்படி ஏராளமான விளக்கங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் ஒரு எதுகை மோனை சந்தத்துக்காக யானை பூனை என்ற விலங்குகளை எடுத்துக் கொண்டதாக நாம் நேரடியாக அறிய முடிகிறது . இரண்டாவதாக யானை உருவத்தில் பெரியது. பூனை உருவத்தில் சிறியது. அந்த வலிமையான விலங்கு ஒரு நேரத்தில் அதிகாரத்தில் இருந்தால் உருவத்தில் சிறியதான பூனையும் ஒரு கட்டத்தில் பலம் பெற்றதாய் இருக்கும் என்று பொருள் அறிவோம்.

அறியாத விளக்கம்

: உண்மையில் அந்த காலத்தில் இந்த பழமொழியை இவ்வாறு உபயோகித்தார்கள் . ஆனை = + நெய் = பசுவின் நெய்

பூனை = பூ +நெய் = பூவின் நெய் ( தேன் ) அதாவது சிறு வயதில் பசுவின் நெய் சாப்பிடுவது நல்லது . அதே நெய் வயதான

காலத்தில் சாப்பிட உடல் ஒத்துக் கொள்ளாது உடம்புக்கு கெடுதலாகும் . தேன் வயதான நிலையில் சில மருந்துகளுடன் கலந்து

சாப்பிட உடம்புக்கு ஏற்றது . இதை நம் முன்னோர்கள் சொல்லி வைத்த விதம் மாற்றி நாம் காலத்திற்கு ஏற்றார்போல் சொல்லி

பயனடைகிறோம்.

No comments:

Post a Comment