அறிந்த விளக்கம் :
ஒரு திருமணம் நல்லபடியாக நடந்து முடிய எத்தனை பொய் வேண்டுமானாலும் சொல்லலாம். தப்பேயில்லை என்பது போல் சில பொய்களால் ஒரு கல்யாணம் நடந்தால் நல்லது என நியாயப்படுத்தும் வழக்க சொல்லில் இந்த பழமொழி அனேகம் பேரால்
சொல்லப்படுகிறது. ஒரு சில பொய்கள் கல்யாணத்திற்கு பின் தெரிய வந்ததுமே விவாகரத்து வரை போன சம்பவங்கள் ஏராளம்
இருக்கின்றது . எனவே இந்த பழமொழியின் உண்மையான வடிவம் இது இல்லை .
அறியாத விளக்கம் :
கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். அதாவது ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம் என்பதை உணர்த்துவதாக அப்படி சொல்லப்படுகிறது. எனவே இந்த திருமணம் என்ற நிகழ்விற்கு சரியான புரிந்துணர்வு மாப்பிள்ளை வீடு - பெண் வீடு என்ற இரு தரப்பினருக்கும் அவசியம் . எனவே திருமணம் சரியாய் நடை பெறுவதற்கான ஒவ்வொரு செயலிலும் சரியான தெளிவு இருக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் முறை போயாவது சொல்லி-விளக்கி ஒரு திருமணத்தை நல்ல முறையில் செய்ய வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. காலவாக்கில் போய் சொல்லி என்பது பொய் சொல்லி என்றாகி விட்டது. இதுவரை மனஸ்தாபங்களால் இருந்து வந்து கொண்டிருக்கும் உறவுகளிடம் எல்லாம் பல முறை போய் சொல்லி அவர்களையும் திருமணத்தில் சேர்த்துக் கொள்வதற்காக சொல்லப்பட்ட ஒரு வழக்குமொழி என்றும் சில கருத்துகள் நிலவுகிறது.

No comments:
Post a Comment