அறிந்த விளக்கம்:
மேற்கண்ட பழமொழி ஊருக்கு ஊர் இனத்துக்கு இனம் வெவ்வேறு வார்த்தைகளால் பிணைத்து பயன்படுத்தப் படுகிறது. எங்கள் ஊர் வழக்கில் ' அதிகம் படிச்ச நாய் வேட்டைக்கு உதவாது' என்பார்கள்( அடியேன் செய்யும் சில 'அதிகப்பிரசங்க செயல்களுக்கு ' என் அம்மா அடிக்கடி பயன்படுத்தும் பழமொழி இது ) . இன்னும் சில இடங்களில் 'எல்லாம் தெரிஞ்சவர்தான் கழனிப்பானைக்குள்ளே கைய விட்டாராம் ' என்பார்கள். ஆக இதெல்லாம் குறிப்பது ஒன்றே ஒன்றுதான் ஆர்வகோளாறில் தெரியாத ஒன்றை செய்யப் போக அது வேறுவிதமான முடிவைத் தரும் என்பதே..மேலும் இந்த விளக்கத்தை சொல்ல வரும் சரியான பழமொழி "சிறு பிள்ளை விதைத்த வெள்ளாமை வீடு வந்து சேராது ' என்பதே..
அறியாத விளக்கம் :
ஆனால் மேற்கண்ட பழமொழி இந்த விளக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
அதாவது "அறவடிச்ச முன்சோறு கழுநீர் பானைக்குள் விழுந்தது" என்பதுதான் சரியான பழமொழி.வட்டார வழக்கில் மருவி அது
மேற்கண்டவாறு திரிந்தது. அதன் பொருள் ஊரில் சோற்றுப் பானையில் கஞ்சி வடிக்கையில் ஒரு சில பருக்கைககள் கஞ்சிக்குள்
விழவே செய்யும் . ஒரு பானை சோற்றுக்காக ஒரு சில சோறு கஞ்சிக்குள் விழுகின்றன. இதனை குறிக்கும் பழமொழி அறவடிச்ச
என்பது அறப்படிச்ச என்றாகி முன் சோறு- மூஞ்சூறு ஆகிவிட்டது .

No comments:
Post a Comment