அறிந்த விளக்கம்
தனக்கு லாபம் இல்லாமல் எந்த செயலிலும் இறங்காத மனிதர்களின் தன்மையை குறிக்கும் படி நேரடி பொருளை கொண்ட
பழமொழியாக இது கருதப்படுகிறது . ஆனால் உண்மையான பழமொழியின் வடிவம், பொருள் இது அல்ல.
அறியாத விளக்கம்
சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பதுதான் இந்த பழமொழியின் சரியான வடிவம். சோழ நாட்டை சார்ந்த ஆண்கள்
முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள்.பாரம் தூக்கும்போது பெண்கள் தம் சீலையை சுற்றி தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக் கொள்வார்கள் .இதற்கு சும்மாடு என்று பெயர்.( பிரம்பு, கோரைகளை கொண்ட சேலை சுற்றிய பொருளும் சும்மாடு என்பதில் அடங்கும் ) . ஆனால் முன்புறம் குடுமி வைத்த சோழ நாட்டவர் தங்களது முன்புற குடுமியை சும்மாடு ஆக பயன்படுத்த முடியாது.ஆகவேதான் அதை குறிக்க சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று வேறாகி திரிந்து விட்டது.

புதிய தகவல் ஒன்று தெரிந்து கொண்டேன் :-)
ReplyDeleteamas32
விளக்கத்திற்கு நன்றி
ReplyDeleteநன்று.சிறு திருத்தம். சோழர்கால ஆண்களின் குடுமியல்ல. சோழியப் பிராமணர்களின் குடுமியை குறிக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்களின் நீண்ட முடியையும் சும்மாடுபோல் தலையில் சுற்றி பொருட்களை சுமந்தனர். ஆனால் சோழியர்களின் பின்னந்தலையில் வைத்த சிறு குடுமி சும்மாடு ஆகாது என சிறிய கேலியாக வந்ததே சோழியன் குடுமி சும்மாடு ஆகாது.
ReplyDelete